1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : புதன், 7 ஜூலை 2021 (10:38 IST)

சிம்பு கௌதம் வாசுதேவ் கூட்டணியில் இரண்டு படங்கள்… அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் உருவாக உள்ளது.

ஐசரி கணேஷ் சிம்புவை வைத்து தயாரிக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு படத்தின் பெயர் நதிகளில் நீராடும் சூரியன் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் அந்த படத்துக்கான வேலைகள் இப்போது நடந்துவரும் நிலையில் இதே கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.