விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தான்… லோகேஷ் அறிவிப்பு!

Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (11:24 IST)

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கும் விக்ரம் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் விலகியது குறித்து தகவல்கள் கசிந்துள்ளன.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இயக்குனர் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.
இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் லோகேஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சத்யன் சூரியன் இந்த படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது படத்தின் புதிய ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் ஆகியுள்ளதை லோகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :