செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (17:06 IST)

செல்வராகவன் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க தயாராகும் தனுஷ்!

இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி இருந்தார். அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளை மேற்கொண்டு வருகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் தொடங்குவதாக இருந்த கைவிடப்பட்ட படங்கள் ஏராளம்.  அந்த வகையில் அவர் இயக்க இருந்த மற்றொரு திரைப்படம் பற்றி நடிகர் பரத் ஒரு தகவலை சமீபத்தில் கூறியிருந்தார்.

அதன்படி “செலவராகவன் இயக்கத்தில் அஜித் மற்றும் தனுஷ் நடிக்க இருந்த படத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் நான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தேன். ஆனால் அந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் நடக்கவில்லை. அது நடந்திருந்தால் என் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருந்திருக்கும்” என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அந்த படத்தை மீண்டும் தொடங்கலாம் என செல்வராகவனிடம் சொல்லியுள்ளாராம் தனுஷ். இப்போது அதற்கான வேலைகளை செல்வராகவன் தொடங்கியுள்ளதாகவும், படத்தில் தனுஷ் உள்ளிட்ட வேறு சில நடிகர்கள் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.