வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (16:58 IST)

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரபல நடிகை ..வைரல் வீடியோ

janvi Kapoor
ஆந்திராவில் உள்ள திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயிலில்  நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம் செய்தார்.

இந்தி சினிமாவின் முன்னணி நடிகை ஜான்வி கபூர். இவர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல   நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் போனிகபூரின் மகள் ஆவார்.

இவர், தடக், கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா என்ற படத்தில் ஜான்வி கபூர் ஹீரோயினாக  நடித்து வருகிறார்.  இப்படத்தில் சயீப் அலிகான் வில்லனாக நடிக்கும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் இன்று திருப்பதி திருமலையில் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.