புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2023 (13:03 IST)

உங்க படத்துல இவருக்கு வாய்ப்புக் கொடுக்காதீங்க… பிரபல இயக்குனரிடம் கூறிய தேவாவின் மனைவி!

தமிழ் சினிமாவில் 90 களில் தன்னுடைய பல ஹிட் பாடல்களால் கோலோச்சியவர் தேனிசை தென்றல் தேவா. ஒரு பக்கம் ரஹ்மான் மறுபக்கம் இளையராஜா என இருவரும் கொடிகட்டி பறந்த காலத்தில் மூன்றாவதாக ஒரு பாதையை உருவாக்கி வெற்றி நடை போட்டவர் தேவா.

2000களுக்குப் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த நிலையில் இப்போது படங்களுக்கு இசையமைப்பதைக் குறைத்துக் கொண்டு தனியிசை ஆல்பங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் அனைவரோடும் பணியாற்றியுள்ள தேவா, இயக்குனர் இமயம் பாரதிராஜாவோடும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பாரதிராஜாவை வீட்டில் சந்தித்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறிய தேவா அப்போது தன் மனைவி பாரதிராஜாவிடம் “நீங்கள் இவருக்கு உங்கள் படத்தில் வாய்ப்புக் கொடுக்காதீர்கள். உங்கள் படத்துக்கு ராஜா சார் தான் சரியான இசையமைப்பாளர்” என நேரடியாகவே கூறிவிட்டாராம். இதை தேவா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.