திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (08:30 IST)

சைக்கிள் டூர் செல்கிறாரா அஜித்? வைரல் புகைப்படம்

ajithkumar
நடிகர் அஜித்குமார் சைக்கிள் பயணம் செய்யும்  புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில்  நடிக்கவுள்ளார்.

இதற்கிடையே, ஐரோப்பாவில் பைக் டூர் சென்ற அஜித்குமார் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதுகுறித்த வீடியோக்களும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகின.

இந்நிலையில், ராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய  லைகா அதிபர் சுபாஷ்கரன் 'விடாமுயற்சி' எங்களின்  முக்கியமான  புராஜெக்ட் என்பதால்  விரைவில் ஷீட்டிங் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். எனவே இந்த படத்தை விரைவில் முழுக்க முழுக்க துபாயில் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், அஜித்குமார் சைக்கிள் ஓட்டிச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அவர் எப்போதும் வழக்கமாக மேற்கொள்ளும் பயிற்சி என்று சிலர் கூறி வருகின்றனர்.