முழுக்க முழுக்க வெளிநாட்டில் உருவாக உள்ள விடாமுயற்சி… எந்த நாட்டில் தெரியுமா?
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.
ஷூட்டிங் தொடங்கும் நாளுக்காக காத்திருந்து காத்திருந்து அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகி வலிமை அப்டேட் போல விடாமுயற்சி அப்டேட்டை செல்லும் இடமெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த படம் கைவிடப்பட உள்ளதாக தகவல்கள் தீப்போல பரவின.
ஆனால் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என லைகா அதிபர் சுபாஷ்கரன் சந்திரமுகி 2 நிகழ்வில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை விரைவில் முழுக்க முழுக்க துபாயில் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.