1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (14:53 IST)

நானே வருவேன் ரிலீஸூக்கு தொடங்கிய ஓடிடி வியாபாரம்… முன்னணி நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் சுவிஸ் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஓடிடி வியாபாரப் பேச்சுவார்த்தையை கலைப்புலி தாணு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. பிரபல ஓடிடியான அமேசான் ப்ரைம் வீடியோவில் படத்தை ரிலீஸூக்குப் பின் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் இதுவரை தனுஷ் படத்துக்கு இல்லாத தொகைக்கு வியாபாரம் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. தனுஷ் படங்களில் கர்ணன் படத்துக்கு அதிக விலை ஓடிடியில் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.