வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (19:05 IST)

சன் டிவி தொடரில் தனுஷ் பட நாயகி: புரமோ ரிலீஸ்!

சன் டிவி தொடரில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சன் டிவியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்று பூவே உனக்காக. இந்த தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பு நட்சத்திரமாக நடிகை சோனியா அகர்வால் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புரோமோ வீடியோ சன் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 
 
வரும் சனிக்கிழமை இந்த தொடர் ஒரு மணி நேரம் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக இருப்பதாகவும் அந்த சிறப்பு நிகழ்ச்சியில் தான் சோனியா அகர்வால் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை சோனியா அகர்வால் தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.