1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (16:42 IST)

கார் விபத்தில் காயமடைந்த சன் டிவி சீரியல் நடிகர்: மருத்துவமனையில் அனுமதி!

சன் டிவி சீரியல் நடிகர் ஒருவர் கார் விபத்தில் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் மனோஜ்குமார்
 
 இயக்குனர் பாரதிராஜாவின் நெருங்கிய உறவினரான இவர் தனது மனைவி மற்றும் உதவியாளருடன் சென்னையில் இருந்து தேனிக்கு காரில் சென்று கொண்டிருந்தார் 
அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் மனோஜ் குமார் அவரது மனைவி மற்றும் உதவியாளர் காயமடைந்தனர்
 
 இதனையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன