கர்ணன் படத்தின் டப்பிங்கை முடித்த தனுஷ்!
நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது அதற்கான டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார் தனுஷ்.
தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் காட்சிகள் லாக்டவுனால் பாதிக்கப்பட்டதால் தளர்வுகளுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடத்தப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த இந்த படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்போது தனுஷ் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இது சம்மந்தமாக தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் டப்பிங் பணிகள் முடிந்தன.. கர்ணனின் குரலை நீங்கள் விரைவில் கேட்பீர்கள் எனக் கூறியுள்ளார்.