திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (20:38 IST)

எனக்கும் தனுஷூக்கும் ஒரே ராசி: விஜய் பட நாயகி பெருமிதம்!

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே 
 
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த தினத்தில் தனுஷ், மாளவிகா ஆகிய இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தனுஷ் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து மாளவிகா மோகனன் கூறும்போது ’நானும் தனுஷும் ஒரே ராசி என்பதால் அவருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. பரஸ்பர அன்பு மற்றும் புன்சிரிப்பு ஆகியவை எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியாக உள்ளது 
 
முதல்கட்ட படப்பிடிப்பில் தனுஷூடன் பணிபுரிந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது. இந்த அணியோடு மீண்டும் எப்போது பணிபுரிய உள்ளேன் என்பதை ஆவலுடன் காத்திருக்கின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார். தனுஷ் மாளவிகா மோகனன் ஒரே ராசி என்ற தகவல் தற்போது ரசிகர் மத்தியில் மிக வேகமாக பரவி வருகிறது