ஐம்பது கோடி ரூபாய் வசூலை நெருங்கும் வெற்றிமாறனின் ‘விடுதலை 2’…!
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை இரண்டாம் பாகம் கடந்த 20 ஆம் தேதி வெளியாகி பாராட்டுகளையும் நல்ல வசூலையும் பெற்றுள்ளது.
படம் வெளியான நாள் முதல் சீரான வசூலைப் பெற்று வருகிறது. ஆனாலும் படத்தில் பிரச்சாரத் தொனி மிகவும் அதிகமாகவுள்ளதாகவும் ஒரு விமர்சனம் எழுந்தது. அதனால் பெரியளவில் வசூல் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி படம் 46+ கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்துக்குள் 50 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.