வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:43 IST)

அவெஞ்சர்ஸ் இயக்குனர் படத்துக்காக அமெரிக்கா செல்லும் தனுஷ்!

அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் ரஸோ பிரதர்ஸின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் தனுஷ் அமெரிக்கா புறப்படவிருக்கிறார்.

ஹாலிவுட்டில் பிரபல சூப்பர்ஹீரோ படமான அவெஞ்சர்ஸ் படம் மூலமாக உலக புகழ் பெற்றவர்கள் இயக்குனர்களான ஜோ ரஸோ மற்றும் ஆண்டனி ரஸோ. இவர்களது இயக்கத்தில் அடுத்ததாக தி க்ரே மேன் என்ற படம் உருவாக உள்ளது. நாவல் ஒன்றை தழுவிய இந்த படத்தில் கேப்டன் அமெரிக்காவாக நடித்த க்ரிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங் உள்ளிட்ட பிரபல ஹாலிவிட் நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் நடிகர் தனுஷ் நாளை அமெரிக்கா புறப்படுகிறார். அங்கு படப்படிப்பில் கலந்து கொள்ளும் அவர் மே மாத இறுதியில் மீண்டும் நாடு திரும்புவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டில் நடிக்க செல்லும் தனுஷிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.