செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (16:51 IST)

உடைந்த வீட்டில் வசிக்கும் பா.ரஞ்சித் பட நடிகர் !

சில ஆண்டுகளுக்கு முன் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தில் நடித்த நடிகர் தங்கராசு ஒருவர் உடைந்த வீட்டில் வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் பரியேறும் பெருமாள். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும்  பெரும்  வெற்றி பெற்றது.

இப்படத்தில் கயல் மற்றும் கதிர் இருவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற படத்தை இரண்டாவதாக  இயக்கிவருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் கதிருக்கு ரீல் அப்பாவாக நடித்தவர் நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசு. இவர் தற்போது நெல்லையில் வசித்து வரும் நிலையில், மழையால் வீடு சேதமடைந்துள்ளது. இந்த வீட்டில்தன் அவர் வசித்து வரும் நிலையில்,  அவர் சிரமத்தில் உள்ளார்.

மேலும், சில சமயங்களில் அவர் சாப்பிடாமல் உள்ளதால் அவரது ஏழ்மையைக் கண்டு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவரது வீட்டை சீரமைத்துத் தர முன் வந்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் சினிமா கலைஞர்கள் மற்றும் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தவர்கள் யாரேனும் நடிகர் மற்றும் கலைஞர் தங்கராசுவுக்கு உதவி செய்வார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.