செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (22:05 IST)

சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்?. தடையில்லாச் சான்று கிடைத்தது !

சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தை வெளியிட தடையில்லாச் சான்று பெறுவதில் தாமதம்  ஆன நிலையில் இன்று சூரரைப் போற்று படத்திற்கு தடையில்லாச் சான்று பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், இப்படம் விமானம் சம்பந்தப்பட்டதால், இது குறித்து விமானப்படை அதிகாரிகள் பார்த்துச் சொல்வதற்குச் சில தாமங்கள் ஆகிறது. இது தேசத்தின் பாதுக்காப்பின் பொருட்டுத்தான். எனவே விரைவில் இப்படத்தில் டிரைலருடன் சந்திப்போம் என்று கூறி, இப்படத்தில் ஆகாசம் என்ற நட்புகுறித்த பாடலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் ஆகாசம் என்ற நட்பு குறித்த பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 5;00 மணிக்கு வெளியாகும் என ஜிபி பிரகாஷ் தெரிவித்தபடி இன்று  ஆகாசம் என்ற பாடல் யூடியூப் தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தடையில்லாச் சான்று பெற்றுள்ளதாக 2டி எண்டெர்டெயின்மென்ட் இணைத்தயாரிப்பாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டு டுவீட்டில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தடையில்லாச் சான்று பெற்றுள்ளதால் விரைவில் புதிய ரிலீஸ் சேதி மற்றும் இன்னு புதிய செய்திகளுக்கு தயாராக இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.