திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (07:47 IST)

ஓடிடி ரிலீஸ் கேன்சல் செய்யப்படுகிறதா? சூரரைப்போற்று படம் குறித்த பரபரப்புத் தகவல்

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வரும் 30-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென நேற்று சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் சூரரைப்போற்று படத்திற்கு கிடைக்கவேண்டிய தடையில்லா சான்றிதழ் கிடைக்க தாமதமாக வருவதாகவும் இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இந்தப் படம் வரும் 30ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்பு இல்லை என்றும் விரைவில் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்
 
இதனால் வரும் 30ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் நவம்பர் 1 முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் நேரடியாக இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ஓடிடி ரிலீஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
சூர்யா இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஓடிடி ரிலீஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
ஆனால் ஏற்கனவே சூர்யா மீது கடும் கோபத்தில் இருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் இதற்கு ஒப்புக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்