புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2024 (13:01 IST)

மார்வெல் ஸ்டுடியோஸ் 'டெட்பூல் &வால்வரின்' குளோபல் பிரஸ் டூர் ஷாங்காயில் தொடங்கியது!

ரியான் ரெனால்ட்ஸ், ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி ஆகியோர் ஷாங்காயில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
 
மார்வெல் ஸ்டுடியோஸ், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 'டெட்பூல் & வால்வரின்' நிகழ்வுகளின் புகைப்படங்களை வெளியிட்டது. நடிகர்கள் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி ஆகியோர் பண்ட் மாவட்டத்தில், ஷாங்காய் ஃபிலிம் ஆர்ட் சென்டரில் ரசிகர்களை  சந்தித்துள்ளனர்.
 
மார்வெல் ஸ்டுடியோஸின் 'டெட்பூல் & வால்வரின்' ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.