திங்கள், 20 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2024 (10:29 IST)

இந்த ஆபாச சீனை மாத்துங்க? அந்த வார்த்தையை சென்சார் பண்ணுங்க!? – இந்தியன் 2வில் எக்கச்சக்க கரெக்சன்ஸ் சொன்ன சென்சார் போர்ட்!

Indian 2

கமல்ஹாசன் – சங்கர் கூட்டணியில் தயாராகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில் எக்கச்சக்க கரெக்சன்களை சொல்லியுள்ளதாம் சென்சார் போர்டு

ஷங்கர் இயக்கத்தில் நீண்ட காலம் கழித்து கமல் நடிக்கும் படம் ‘இந்தியன் 2’. முன்னதாக வெளியான இந்தியன் பாகத்தின் தொடர்ச்சியான இந்த படத்தை இரண்டு பாகமாக ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ என எடுத்திருக்கிறார் சங்கர். இந்த படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஷங்கர் படத்திற்கு முதன்முறையாக அனிருத் இசையமைத்துள்ள நிலையில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்தியன் 2 திரைப்படம் சென்சார் சர்டிபிகேட் அளிக்கப்படுவதற்காக தணிக்கைக்குழுவால் பார்க்கப்பட்ட நிலையில் நிறைய மாற்றங்களை செய்ய சொல்லியுள்ளனர்.
 

மொத்தம் 3 மணி நேரம் 4 வினாடிகள் நீளம் கொண்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தில் புகைப்பிடித்தல் தொடர்பான எச்சரிக்கை வாகசங்களை வெள்ளை நிற பிண்ணனியில் கருப்பு எழுத்துகளில் பெரிதாக காட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

படத்தின் ஒரு காட்சியில் வரும் ஊழல் சந்தை என்ற லேபிளை நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நடிகர்கள் குறைந்த ஆடையோடு மற்றும் ஆடையில்லாது தோன்றும் காட்சிகளை மாற்ற வேண்டும். டர்ட்டி இந்தியன், F**K உள்ளிட்ட கெட்ட வார்த்தைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல மாற்றங்களை தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K