ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்.. உறுதி செய்த ஸ்ருதிஹாசன்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டிருப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் படப்பிடிப்பு தொடங்கியதை உறுதி செய்துள்ளது.
அதேபோல் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளத்தில் கூலி படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் கலந்து கொண்டதாக அறிவித்துள்ளதை அடுத்து அவர் இந்த படத்தில் நடிக்க இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் இன்று இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran