திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (15:52 IST)

தர்பார் முதல்பாதி எப்படி ? இரண்டாம் பாதி எப்படி – செம்மயாக கலாய்த்த ரசிகர் !

தர்பார் படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளதாகவும் இரண்டாம் பாதி நன்றாக இல்லை எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இன்று உலகம் முழுவதும் வெளியான தர்பார் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படத்தின் முக்கியமான குறையாக சொல்லப்படுவது முதல்பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லை என்பதே.

இந்நிலையில் யுட்யூப் சேனல் ஒன்றுக்கு தனது கருத்தைத் தெரிவித்த ரசிகர் இதையே வித்தியாசமாக சொல்லியுள்ளார். தியேட்டரில் இருந்து வெளியில் வரும் அவர் ‘பர்ஸ்ட் ஆஃப் செம்ம… ரஜினிய பயங்கரமா பாக்கலாம்’ என சொல்ல, தொகுப்பாளர்  ’ஏன் சோகமா இருக்கீங்க’ எனக் கேட்க ‘செகண்ட் ஆஃப்ல கொஞ்சம் தூங்கிட்டேன்’ என சொல்லி செல்கிறார். இந்த வீடியோ காட்சியை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.