1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (15:52 IST)

தர்பார் மோகம்: ரஜினிக்காக ஜப்பானிலிருந்து சென்னை வந்திறங்கிய ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் வெளிவரும் நாளே ஒரு பொங்கல் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தர்பார் திரைப்படம் வெளி வந்துள்ளதால் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு டபுள் ட்ரீட்டாக இந்த படம் அமைந்துள்ளது. உலகம் முழுக்க இருக்கும் தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை ஆர்வத்துடன் திரையில் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். 
 
இப்படி தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினிக்கு வெளிநாடுகளிலும் தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை தற்போது எடுத்துக்காட்டியுள்ளது. அதாவது சொல்லவரும் தகவல் என்னவென்றால், தர்பார் படம் பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக யசுதா என்பவர் அவருடைய மனைவி ஷாட் சூஷ்க்கியுடன் தர்பார் படத்தின் முதல் காட்சியை காண்பதற்காக சென்னை வந்துள்ளார்.
 
இதற்கு முன்னர் பாபா படம் வெளிவரும்போது தமிழக ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக பார்ப்பதற்காக முதன்முதலாக சென்னை வந்திருக்கிறார். ரஜினி படத்திற்காக மட்டும் இதுவரை கிட்டதட்ட பத்து முறை முதல் காட்சியை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளதாக அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் பேசிய அவர்கள், தங்களுக்கு தமிழக அரசியல் பற்றி தெரியாது இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என இந்த ஜப்பானிய ரசிகர் ரஜினிக்கு அன்பு கோரிக்கை வைத்துள்ளனர்.