#valimai 'படத்தால் தியேட்டரில் மக்கள் கூட்டம் மீண்டும் வரும் - பிரபல இசையமைப்பாளர்
நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தைக் குறித்துப் பிரபல இசையமைப்பாளர் புகழ்ந்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை நள்ளிரவு முதல் இப்படம் ரிலிஸாகவுள்ள நிலையில், இப்படத்தின் #ValimaiPreReleaseEvent இன்று நடைபெற்றது.
இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெரும் எனவும், இப்படம் ரிலீஸானதும் மீண்டும் தியேட்டரில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வலிமை#valimai படத்தை திருவிழாவாகக் கொண்டாட அஜித் ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.