செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 பிப்ரவரி 2022 (16:03 IST)

''வலிமை ''பட தெலுங்கு, இந்தி , கன்னடம் பதிப்பு டிரைலர்களை வெளியிடும் சூப்பர் ஸ்டார்கள்

’'வலிமை’’ படத்தின் தெலுங்கு, இந்தி டிரைலர்களை மகேஷ்பாபு, அஜய் தேவ் கான் இருவரும் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்துள்ள படம் ‘வலிமை.’

இத்திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டரில் அறிவித்தார். எனவே இப்படத்தின் ரிலீஸ்  நாளுக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் திரை அரங்குகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாகவும் போனிகபூர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் இந்தி, தெலுங்கு டிரைலர் இன்று வெளியாகிறது. இதன் தெலுங்கு டிரைலரை  தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும், இந்தி டிரைலரை அஜய் தேவ் கானும், கன்னட பதிப்பு டிரைலரை கிச்சா சுதீப்பும்  வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

இன்று மாலை 6:30 மணிக்கு வலிமை பட தெலுங்கு, இந்தி பதிப்பு டிரைலர்கள் ரிலீஸாகும்    நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.