ஸ்ருதிஹாசனின் தெலுங்கு படம் தமிழில் ரிலீஸ் – தேதி அறிவிப்பு!
ரவி தேஜா மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தெலுங்கு படமான கிராக் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
ரவிதேஜா ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவில் வரிசையாக ஹிட் படங்களாகக் கொடுத்து வந்தார். ஆனால் இடையில் பல சறுக்கல்களை சந்தித்தார். சமீபத்தில் வெளியான டிஸ்கோ ராஜா திரைப்படம் அவருக்கு ஒரு கம்பேக்காக அமைந்தது. அதையடுத்து இப்போது அவர் க்ராக் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டீசர் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது.
படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்பட்ட நிலையில் சில பிரச்சனைகளால் ஜனவரி 10 ஆம் தேதிதான் ரிலீஸானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இப்போது இந்த படத்தை தமிழ் மற்றும் கன்னடத்தில் டப் செய்து பிப்ரவரி 5 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.