செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 20 மே 2021 (10:48 IST)

குக் வித் கோமாளி தீபாவா இது....? வைரலாகும் திருமண புகைப்படம்

தமிழ் சினிமாவில் வெகுளியான நடிகையாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் நடிகை தீபா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைகுட்டிசிங்கம் படத்தில் அவரின் அக்காக்களில் ஒருவராக  நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்து பிரபலமானார். 
 
அதன் மூலம் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து நிறைய படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.   

புசு புசு அழகியாக கருப்பு நிலா போன்று இருக்கும் தீபாவின் திருமண புகைப்படம் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ஆள் அடையாளமே தெரியாத வகையில் ஒல்லியாக இருக்கும் தீபாவை கண்டு எல்லோரும் வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.