செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 19 மே 2021 (22:26 IST)

''குக் வித் கோமாளி'' புகழ் நடிகை தடுப்பூசி செலுத்தினார்...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும்  விக்னேஷ் சிவன்  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை பவித்ரா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதுகுறித்த புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இவர் நடிகர் சதீஸ் நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.