செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj

சுஷாந்துக்கு இசை நிகழ்ச்சி – ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பு

கடந்த மாதம் 14 ஆம் தேதி மும்மை வீட்டில் தங்கியிருந்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாரிசு நடிகர்களின் அழுத்தம் தான் அவரது தற்கொலைக்குக் காரணம் என கூறப்பட்டது.

இதனையடுத்து, அவர் நடிப்பில் வெளியாகவுள்ள அவரது கடைசிப் படம் தில் பேச்சாரா ஜான் கிரீன்  எழுதிய தி ஃபால்ப் இன் அவர் ஸ்டார்ஸ் என்ற நாவலை தழுவி படமாக்கப்பட்டுள்ளது.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஜூலை 24 ஆம் தேதி இப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார்ஸில் நேரடியாக வெளியாகும் எனவும் இதை அனைவரும் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங்  இணையம் வழியாக இசை அஞ்சலி நிகழ்ச்சியில் ஏ.அர்.ரஹ்மான் உள்ளிட்ட பலவேறு நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.