செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 10 ஜூலை 2020 (19:40 IST)

உலக சாதனை படைக்கும் சுஷாந்தின் "Dil Bechara" டைட்டில் ட்ராக் வீடியோ!

மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி திரைப்படமான " Dil Bechara " டைட்டில் ட்ராக் வீடியோ ரிலீஸ்.
 
பாலிவுட் உலகில் பிரபல இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் சில வாரங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக நடித்து வெளியாக தயாராக உள்ள படம் “தில் பேச்சாரா”. இந்த படம் மே மாதமே ரிலீஸ் ஆகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
The Fault in our Stars என்ற ஹாலிவுட் படத்தின் ரீ மேக்கான இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் ஜுலை 24-ம் தேதி நேரடியாக தனது OTTதளத்தில் வெளியிடுகிறது. அண்மையில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான டைட்டில் ட்ராக் இன்று வெளியாகி அமோக வரவேற்பை பெற்று மாபெரும் சாதனை நிகழ்த்தி வருகிறது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த பாடல் ப்ரீமியராகும் போது இசையமைப்பாளர் AR ரஹ்மான் தோன்றி இன்பதிர்ச்சி தருகிறார். மிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ள இந்த பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடனத்தால் ரசிகர்களை ஈர்க்கும் சுஷாந்தின் இந்த பாடல் வெறும் 5 மணி நேரத்தில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பெறுள்ளது.