செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (11:55 IST)

கடவுளின் குழந்தை – சுஷாந்தின் முன்னாள் காதலி பகிர்ந்த புகைப்படம்!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் காதலி அங்கிதா சுஷாந்த் மறைவை குறிக்கும் விதமாக ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) கடந்த மாதம் இதே நாள் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அவரது மரணம் குறித்து பலரும் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் அவரின் முன்னாள் காதலியும் நடிகையுமான அங்கிதா லோஹண்டே ஊடகங்களிடம் எதுவும் பேசாமல் இருந்தார். ஆனால் சுஷாந்தின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் சுஷாந்தின் மறைவின் ஒரு மாதம் நினைவை ஒட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் தனது பூஜை அறையில் மலர்கள் சூழ ஒரு சிறிய விளக்கை ஏற்றி வைத்துள்ளார். மேலும் புகைப்படத்திற்கு கேப்ஷனாக ‘கடவுளின் குழந்தை’ என சுஷாந்தைக் குறிக்கும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.