திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (08:02 IST)

தனுஷ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்?

நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார். அவர் அடுத்து இயக்க இருந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ‘பாகுபலி’ போன்ற சரித்திரக்கதையைத்தான் அவர் படமாக்கப் போவதாக சொன்னார்கள்.

இந்த படத்தின் ஷூட்டிங்கும் 40 சதவீதம் வரை நடத்தி முடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. படத்தில் தனுஷோடு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடித்தார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை தனுஷ் முடித்துக் கொடுக்க வேண்டுமென தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளதாகவும் இது சம்மந்தமாக ஒருவாரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேனாண்டாள் முரளிதான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.