கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் லோடிங்… தனுஷ் கொடுத்த எக்ஸைட்டிங் அப்டேட்!
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது.
இந்த படத்துக்காக நீளமாக தாடி மற்றும் முடிவளர்த்து மற்ற படங்கள் எதிலும் நடிக்காமல் சில மாதங்களாக நடித்து வருகிறார் தனுஷ். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சிவராஜ்குமாரின் காட்சிகளை படமாக்கி முடித்ததாக அறிவித்தனர்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் மற்ற அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் முதல் லுக் போஸ்டர் விரைவில் ரிலீஸாகும் என தனுஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.