வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (18:50 IST)

நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய மாணவர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட்!

aparna
நடிகை அபர்ணாவிடம் அத்து மீறி நடந்து கொண்ட கல்லூரி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 நடிகை அபர்ணா திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றுக்காக எர்ணாகுளத்தில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். 
 
அப்போது அவரை வரவேற்ற கல்லூரி மாணவர் ஒருவர் அவருக்கு கை கொடுத்ததோடு அவர் தோளின் மீது கை போட முயன்றார். அதை லாவகமாக தடுத்த அபர்ணா குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியானது
 
மேலும் அந்த கல்லூரி மாணவருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மேடையிலேயே தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்
 
இந்த நிலையில் அபர்ணாவுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த கல்லூரி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
Edited by Siva