அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்த மாணவர்! வைரலாகும் வீடியோ!
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தமிழில் 8 தோட்டாக்கள், சூரைரை போற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் அபர்ணா பாலமுரளி. தற்போது இவர் நடித்துள்ள தங்கம் என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தங்கம் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க மாணவர் ஒருவர் அழைக்கப்பட்டார். அவர் பூங்கொத்தை கொடுத்து புகைப்படம் எடுத்தபோது அபர்ணா தோள் மீது கையை போட முயன்றார்.
ஆனால் அபர்ணா அதனால் சங்கோஜப்பட்டு அதை தவிர்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவர் அனுமதி இல்லாமல் அவர் தோள் மேல் கைவைக்க முயன்றது தவறு என்றும், அதை கண்டிக்காமல் படக்குழுவினர், கல்லூரி நிர்வாகம் இருந்தது குறித்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Edit By Prasanth.K