செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (16:20 IST)

வாயை விட்டு மாட்டிக்கொண்ட சின்மயி - வச்சு செய்யும் நெட்டிசன்கள்

கவிஞர் வைரமுத்துவை பாராட்டி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் போட்ட பதிவுகளை தற்போது நெட்டிசன்கள் எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

 
பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 13 வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்துக்கு சென்ற போது தனிமையில் சந்திக்க தன்னை அழைத்ததாக சின்மயி கூறியிருந்தார். 
 
ஆனால், கடந்த சில வருடங்களில் வைரமுத்துவை புகழ்ந்து அவர் பல பதிவுகளை இட்டிருந்தார். 2014ம் ஆண்டு வைரமுத்து பத்மபூஷன் வாங்கிய போது அவர் இட்ட டிவிட் உட்பட, பல பதிவுகளை தற்போது எடுத்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 
13 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு சுவிட்சர்லாந்தில் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் எனக்கூறியுள்ள சின்மயி, அந்த சம்பவம் நடந்த பின் எப்படி இப்படி டிவிட்களை செய்தார்? இது அட்மின் போட்டதா? எனக்கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.