திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (12:31 IST)

ஆடையை கழற்று.. பார்க்க வேண்டும் - இயக்குனர் மீது நடிகை புகார்

பாலிவுட் இயக்குனர் சஜித் கான் மீது பாலியல் புகார் கூறும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

 
நாடெங்கும் தற்போது #Metoo என்கிற ஹேஷ்டேக்கில் பல்வேறு துறைய சேர்ந்த பல பெண்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேசி வருகின்றனர். கோலிவுட் மட்டுமின்றி, பாலிவுட்டில் பல நடிகர்கள் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. 
 
சமீபத்தில், பாலிவுட் நடிகர் நாடே படேகர் மற்றும் ஆலோக் நாத் மீது பல நடிகைகள் புகார் கூறினர்.அதேபோல், இயக்குனர் சஜித் கான் மீது சலோனி சோப்ரா, ரேச்சல் ஒயிட் என இரண்டு பெண்கள் பாலியல் புகார் கூறியுள்ளனர்.

 
இந்நிலையில், பாலிவுட் நடிகை சிம்ரன் சுரியும் சஜித் கான் மீது புகார் கூறியுள்ளார்.  தெரிவித்துள்ள புகாரில் கூறியதாவது:
 
2012ம் ஆண்டு ஒரு புதிய படத்திற்காக நடிகர், நடிகைகளி சஜித் கான் தேர்வு செய்து கொண்டிருந்தார். என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். நான் சென்றபோது ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தார். என் உடலை பார். நன்றாக இருக்கிறது எனக்கூறினார்.
 
அதன் உன் உடையை கழற்று என்றார். நான் அதிர்ச்சி அடைந்தேன். நான்தான் இயக்குனர். உன் உடலை பார்க்க வேண்டும் என்றார். ஆனால், ஆடையை கழற்றவில்லை. ஆனால், அவரே என் ஆடையை கழற்ற முயன்றார். எனவே, அவரை திட்டினேன். ஆனால், சத்தம் போடாதே என் அம்மா அருகில் இருக்கிறார் எனக் கூறினார்.
 
உடனடியாக அங்கிருந்து வெளியேறி விட்டேன். சிறிது நேரம் கழித்து என்னை போன் செய்து, நாம் இணைந்து வேலை பார்க்க வேண்டுமெனில், ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். மீண்டும் அவரை திட்டினேன். 
 
இதுபற்றி வெளியே கூற வேண்டும் என 6 ஆண்டுகளாக நினைத்தேன். ஆனால், யாரும் நம்ப மாட்டார்கள் என விட்டு விட்டேன். இப்போது அவரை பற்றி பலரும் பேச தொடங்கியுள்ளதால், நானும் தைரியமாக பேச வந்துள்ளேன் என சிம்ரன் சுரி கூறியுள்ளார்.