திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (13:10 IST)

உண்மையில் அங்கு நடந்தது என்ன ? சின்மயியை அழைத்து சென்றவர் அதிரடி பதில்

வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றம் சாட்டியுள்ளதில் துளியும் உண்மை இல்லை என சுவிட்சர்லாந்துக்கு அழைத்து சென்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இனியவன் தெரிவித்துள்ளார். 
2004 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சி முடிந்ததும் வைரமுத்துவும் சின்மயியும் தனித்தனியான இடத்தில் தங்கியிருந்தனர். ஆதலால் அந்த நேரத்தில் சின்மயி குற்றம் சாட்டுவதுபோல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.
 
மேலும், இந்த சம்பவத்திற்கு பிறகு சின்மயி வைரமுத்துவின் வீட்டுற்கு சென்று திருமண பத்திரிகையை கொடுத்தார்.அதேபோல் வைரமுத்துவின் பிறந்தநாளன்று சின்மயியின் தயாரும் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில் நீங்களும் ஏ.ஆர். ரஹ்மானும் சின்மயிக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும் சின்மயியின் தாய் வைரமுத்துவிடம் கூறினார். 
 
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது நான் தான், அழைப்பு விடுத்த எல்லோரையும் அங்கு நான் தான் அழைத்து சென்றேன்.சின்மயி இப்படி பொய் சொல்வது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது என அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இனியவன் தெரிவித்துள்ளார்.