திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (13:47 IST)

பாலியல் புகார் கூறிய வின்டா நந்தா மீது ரூ.1 நஷ்ட ஈடு கேட்டு அலோக்நாத் வழக்கு..

பாலிவுட்டின் பிரபல குணச்சித்திர நடிகர் அலோக்நாத் மீது எழுத்தாளரும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான வின்டா நந்தா பாலியல் பலாத்கார புகாரை தெரிவித்தார்.

 
இதற்கு உடனே மறுப்பு தெரிவித்தார் அலோக்நாத். இந்நிலையில்  வின்டா நந்தா மீது மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அலோக்நாத்.
 
நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
 
வின்டா நந்தாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் வீட்டிலும், வெளியிலும் என்னுடைய நன்மதிப்பு குலைந்துவிட்டது. அபாண்டமான குற்றச்சாட்டால்  மிகுந்த மனவேதனையில் தவிக்கின்றேன். எந்த ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டை வின்டா நந்தா என் மீது சுமத்தி உள்ளார்.  எனவே என்னிடம் வின்டா நந்தா மன்னிப்பு கேட்க வேண்டும், எனக்கு அவர்  ஒரு ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். 
 
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அலோக்நாத்தின் மனைவி அவருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்தார். அதை பதிவு செய்து கொண்ட நீமன்றம் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தது.