1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 21 ஜனவரி 2020 (09:04 IST)

அஜித் ரசிகர்கள்-கஸ்தூரி விவகாரத்தில் தலையிட்ட சின்மயி: சமூக வலைத்தளத்தில் பரபரப்பு

அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இடையே ஏற்கனவே டுவிட்டர் இணையதளத்தில் வார்த்தைப் போர் நடந்து எல்லை மீறி ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல் பாடகி சின்மயி இந்த விஷயத்தில் திடீரென தலையிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்
 
நடிகை கஸ்தூரிக்கு அவர் கூறிய போது ’இந்த விஷயத்தை நீங்கள் சைபர் கிரைம் காவல்துறைக்கு கொண்டு செல்லுங்கள். டுவிட்டர் இந்தியாவோ அல்லது வேறு யாரோ இது குறித்து எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். அஜித் ரசிகர்களை யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள். எனவே காவல் துறைக்கு செல்வது தான் சரியான வழி என்று கூறியுள்ளார் 
 
அதுமட்டுமன்றி தன்னுடைய குரலுக்கு ரசிகர் என்று கூறிய அஜித் ரசிகரை அவமானப்படுத்தும் வகையில் சின்மயி பதிவு செய்துள்ள ஒரு ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த டுவிட்டில் சின்மயி கூறியிருப்பதாவது: உங்களை மாதிரி ஆம்பள எல்லாம் நான் உத்தமியா? இல்லையான்னு சொல்ல தகுதி இருக்கான்னு யாருக்கு தெரியும். உங்களைப்போல அழுகிய வார்த்தைகள் யூஸ் பண்ற ஆட்கள் எல்லாம் என் குரலுக்கு ரசிகன் சொன்னால் எனக்குத்தான் அவமானம்’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து கஸ்தூரியை விட்டுவிட்டு அஜித் ரசிகர்கள் தற்போது சின்மயியை டார்கெட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.