புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (19:57 IST)

சர்ச்சை கருத்தை திரும்ப பெற்ற சிவசேனா எம்பி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அந்த கருத்தை திரும்ப பெறுவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்
 
சமீபத்தில் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல், சரத் ஷெட்டி ஆகிய நிழல் உலக தாதாக்கள் தான் மகாராஷ்டிராவில் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ததாகவும், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நிழல் உலக தாதா கரீம் லாலாவை சந்தித்து பேசியதாகவும் தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தனது கருத்தை சஞ்சய் ராவத் திரும்ப பெறாவிட்டால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
 
இதனையடுத்து சஞ்சய் ராவத் தனது ட்விட்டரில், நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீது, பெரிய மரியாதை வைத்திருப்பதாகவும், எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் பிரச்சனைகளின் அடிப்படையில் இந்திரா காந்தியின் பல கருத்துக்களை ஆதரித்து இருப்பதாகவும் கூறியுளார். தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்திரா காந்தி குறித்த தமது கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் சஞ்சய் ராவத் பதிவிட்டுள்ளார்.