பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்ணை தூக்கிச் சென்ற ராணுவவீரர்கள்... பிரதமர் மோடி வாழ்த்து!
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஷமீமா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கு அதிக பனிப் பொழிவதால் அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் இடையூறு ஏற்பட்டது.
இந்நிலையில், அந்தப் பகுதிக்கு வந்த 100 ராணுவ வீரர்கள், அங்குள்ள பொதுமக்களுடன் இணைந்து, சுமார் 4 மணி நேரம் அப்பெண்ணை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் ஷமீமாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பான வீடியோ இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. தற்ப்போது இது வைரல் ஆகி வருகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த வீடியோவுக்கு ரீடுவீட் செய்ததுடன், ராணுவ வீரர்களின் செயலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், செய்யும் தொழிலுக்கு பெருமை பெயர் பெற்றவர்கள் நமது ராணுவ வீரர்கள். அவர்களின் மனித நேயம் மரியாதைக்குரியது. மக்களுக்கு தேவையான உதவியை அவர்களால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.