செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Snoj
Last Modified: வியாழன், 14 ஜனவரி 2021 (14:43 IST)

பிரபல இயக்குநருக்கு உதவி செய்யும் முதல்வர் பழனிசாமி !!

இயக்குனர் அமீர் நடிப்பில் வி இசட் தொரை இயக்கியுள்ள நாற்காலி படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இயக்குநர் அமீருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவ உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் பருத்தி வீரன், ராம் போன்ற கிளாசிக் படங்களைக் கொடுத்து முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்ததாக நாற்காலி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்தள்ளார்.

அரசியல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகி வரும் நாற்காலி படத்தை முகவரி, தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கிய வி. இசட். துரை இயக்கியுள்ளார். நீண்ட காலமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து படத்தின் புதிய போஸடரை  சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், இப்படத்தில் நாற்காலி படத்தில் எஸ்.பி.பி குரலில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற எம்.ஜி.ஆர் படப்பாடலை வரும் ஜனவரி 16 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி  வெளியிடவுள்ளதகத் தகவல் வெளியாகிறது.

முதல்வ பழனிசாமி அவர்கள் இப்பாடலை வெளியிட அமைச்சர் செல்லூர் ராஜி அவர்கள் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு பாடல் கேசட்டைப் பெற்றுக்கொள்ள இருக்கிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் வித்யாசகர். இப்படத்திற்கு இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  வரும் மார்ச் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.