அந்தாதூன் இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி! இரண்டாவது இந்தி படத்தில் ஒப்பந்தம்!

Last Modified வியாழன், 14 ஜனவரி 2021 (09:49 IST)

அந்தாதூன் படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம்
ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது. இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கனவே அவர் மாநகரம் படத்தின் ரீமேக்கான மும்பை கார் படத்திலும் ஒரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :