விஜய், அஜித் பட நடிகைக்கு இன்று பிறந்தநாள்! குவியும் வாழ்த்துகள்
தமிழ் சினிமாவில் இ 20-ல் முன்னணி நடிகையாக இருந்தவர் கிரண் ராத்தோட். இவர் இன்று தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எனவே சினிமாத்துறையினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
விக்ரம் நடித்து கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெமினி. இப்படத்தில் ஹீரோயினா அறிமுகமானவர் கிரண் ரத்தோட் . இப்படத்தில் இடம்பெற்ற ஓ போடு பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஹிட் ஆனது. இப்படமும் பெரும் வெற்றி பெற்றது. r #kiran rathod
அதன்பின் கிரண், அஜித்துடன் வில்லன் , கமலுடன் அன்பே சிவம், சரத்குமாருடன் திவான், பிரசாந்த்துடன் வின்னர், பரசுராம், தென்னவன், திருமலை நியூ , திமிரு, சுந்தர் சியுடன் முத்தின கத்திரிக்கா,விஷாலுடன் ஆம்பள உள்ளிட்ட பலபடங்களில் நாயகியாக நடித்தார். திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடினார்.
இந்நிலையில் கிரண் தற்போது இந்தி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். இன்று அவர் தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.