1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 மே 2021 (19:04 IST)

கமல்ஹாசன் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகி விலகல்...10 பேர் ராஜினாமா

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகி விலகியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது. இதர கட்சிகளான சீமானின் நாம் தமிழர், தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருந்தாலும் அரசியல் விமர்சகர்கள் திமுக அதிமுக கட்சிகளில் எதாவது ஒன்றுதான் ஆட்சிக்கு வரும் எனக் கணித்தனர்.

அதன்படி தேர்தலுக்கு முந்தைய கருத்துகளைப் போல் நேற்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது.

அதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி சுமார் 160 -170 இடங்கள் பெற்றித் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயிப்பார் எனக் கூறப்பட்டது. அதேபோல் திமுக 123 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வென்றது, திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, நாளை ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்கிறார்.

சமீபத்தில் மய்யம் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், உதயநிதி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து  வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மய்யம் நீதி மய்யம் கட்சியிலிருந்து  அக்கட்சியின் துணைத்தலைவர் விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் ம.நீ.ம கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மேலும், இன்றுநடைபெற்ற ம.நி.ம கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்சியில் தலைமை நிர்வாகிகள் 10 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.  கட்சியை சீரமைப்பதற்கான முழு அதிகாரத்தை வழங்கியுள்ளோம் என பொன்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

 இதுகுறித்து மகேந்திரன் கூறியதாவது:  ம.நீ,கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்குப் பிறகும், தனது தோல்விக்குப்பிறகும் கமல்ஹாசன் தன்து அணுகுமுறையில் இருந்து  மாறுபடுவதாகத்  தெரியவில்லைல் நம்பிக்கையுமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் , துணைத்தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர் சந்தோஷ்பாபு, சிகே குமரவேல், மவுரியா, பொதுச்செயலாளர் முருகானந்த, நிர்வாகக்குழு உறுப்பினர் உமாதேவி,  உள்ளிட்டோரும் ராஜினாமா செய்துள்ளனர்.