புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (09:06 IST)

விவேக்குக்கு மரியாதை செலுத்த இரண்டு திட்டங்கள்… மத்திய அரசு ஆலோசனை!

நடிகர் விவேக் மறைந்ததை அடுத்து அவரைக் கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இரண்டு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகரும் இயற்கை ஆர்வலருமான விவேக் சில தினங்களுக்கு முன்னர் இயற்கை எய்தினார். இறப்பதற்கு முன்னர் கூட கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதையடுத்து அவரது உடலுக்கு தமிழக அரசு அரச மரியாதை அளித்தது. இந்நிலையில் இப்போது மத்திய அரசு அவரைக் கௌரவிக்கும் வகையில் சென்னையில் உள்ள ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்துக்கு அவர் பெயரை வைக்கவோ அல்லது அவர் முகம் பொறித்த ஸ்டாம்ப் வெளியிடவோ முடிவு செய்துள்ளதாம்.