செவ்வாய், 6 ஜூன் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: ஞாயிறு, 8 ஜனவரி 2023 (13:49 IST)

ரெட் ஜெய்ண்ட் பற்றிப் பேசலாமே?கூட்டணி தர்மம் தடுக்கிறதோ? திருமாவுக்கு பிஸ்மி கேள்வி

bismi
திரையுலகத்தையே உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்வது பற்றி பேச வேண்டும் என சினிமா விமர்சகர் பிஸ்மி டுவீட் பதிவிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமீபத்தில் இரும்பன் என்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது, பேசிய திருமாவளவன் எம்பி,  ''ஒரு தனி நபரில் கையில்  எல்லா திரையரங்குகளின் நிர்வாகமும் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது என்றால் விநியோகஸ்தர்கள் நிலை என்னாகும்? சினிமாவும் கார்பரேட் மயமாதலுக்கு இரையாகி வருகிறது'' என்று தெரிவித்திருந்தார்.
 

இந்த நிலையில்,  பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி தன் டுவிட்டர் பக்கத்தில், இன்று, ஒரு  பதிவிட்டுள்ளார்.

அதில், திரையரங்குகள் ஒரு சிலரின் (பிவிஆர் சினிமா) கட்டுப்பாட்டுக்குள் சென்றது பற்றி பேசும் தோழர். திருமாவளவன், திரையுலகத்தையே உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்வது பற்றியும் வெளிப்படையாகப் பேசலாமே? கூட்டணி தர்மம் தடுக்கிறதோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.