வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (11:23 IST)

500 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட புட்ட பொம்மா பாடல்!

அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடனத்தில் உருவான புட்ட பொம்மா பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சங்கராந்தியை முன்னிட்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் அலா வைகுந்தபுரம்லூ எனும் படம் ரிலிஸ் ஆனது. இதில் இடம்பெற்றுள்ள புட்டா பொம்மா என்ற பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில் உடனே டிக்டாக்கில் வைரல் ஆகியது. இந்த பாடலுக்கு அல்லு அர்ஜுன் ஆடும் வித்தியாசமான நடன அசைவுகளைப் பலரும் ஆடி டிக்டாக் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையிலும் கூட அந்த பாடல் இப்போதும் பலரால் பார்க்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த பாடலை பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 500 மில்லியனை தாண்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.