புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (17:35 IST)

45 நாட்கள் கஷ்டப்பட்டு வரைந்த ஓவியம்… அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி!

நடிகர் பிரம்மானந்தம் தான் வரைந்த வெங்கடாஜலபதி ஓவியத்தை அல்லு அர்ஜுனுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கி வருபவர் பிரம்மானந்தம். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பெருமைக்குரிய அவர் இப்போதும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். நகைச்சுவை நடிகராக அறியப்படும் இவர் ஓவியத்திலும் கைதேர்ந்தவர். அப்படி கையால் 45 நாட்கள் கஷ்டப்பட்டு வரைந்த வெங்கடாஜலபதியின் ஓவியத்தை சக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புத்தாண்டு பரிசாக வழங்கியுள்ளார்.

அந்த ஓவியத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்ட அல்லு அர்ஜுன் பிரம்மானந்தத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.