வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:51 IST)

அருண் விஜய்யின் பார்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் அருண் விஜய் நடிக்கும் பார்டர் படம் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் திரைப்படம் “பார்டர்”. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் படம் இந்த “பார்டர்”. இதில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

ஆனால் கொரோன இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது திரையரங்குகள் திறக்க இன்னும் நாள் ஆகும் என்பதால் ஓடிடி ரிலீஸ் என படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் இப்போது ஜுலை இரண்டாவது வாரத்தில் திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ள நிலையில் படத்தை திரையரங்கிலேயே ரிலீஸ் செய்யும் முடிவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நவம்பர் 19 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி அண்ணாத்த திரைப்படத்தோடு மாநாடு வெளியாக, இரண்டு வார இடைவெளியில் பார்டர் ரிலீஸாக உள்ளது.